பெரியார் 1000


( தந்தை பெரியார் )
( 17-09-1879 - 24-12-1973 )

தந்தை பெரியார்

தந்தை பெரியார் ஓர் ஒப்பற்ற சுய சிந்தனையாளர், உலகச் சிந்தனை யாளர்கள் வரிசையில் வைத்துப் போற்றப்படுபவர், அய்.நா. மன்றத்தினு டைய கிளைப் பிரிவான 'யுனெஸ்கோ' மன்றம் விருது வழங்கி சிறப்பித் திருக்கிறது. தந்தை பெரியார் நூற்றாண்டையொட்டி இந்திய அரசு அஞ்சல் தலையும், அவரது 125ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி சிறப்பு அஞ்சல் உறையும் வெளியிட்டு பாராட்டியுள்ளது. தமிழக அரசு பாடத் திட்டத்தில் தந்தை பெரியாரின் தொண்டினைப் பதிவு செய்திருக்கிறது.

தஞ்சாவூரில் உள்ள பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம் பள்ளி மாணவர்களுக்கான 'பெரியார் 1000' எனும் மாபெரும் வினா - விடைப் போட்டியினை 2011ஆம் ஆண்டு முதல் நடத்தி வருகிறது. பள்ளி மாணவர்கள் 'பெரியார் 1000' வினா - விடைப் போட்டி' எனும் இந்த அறிவுத் திருவிழாவல் கலந்து கொண்டு பயன்பெற்று வருகிறார்கள். முதன் முதலில் 2011ஆம் ஆண்டு தொடங்கியபோது 100 மாணவர்கள் தேர்வு எழுதினர்.

அதன்பின் 17,000, 50,000, 75,000, 78,500 என்று ஆண்டு தோறும் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை படிப் படியாக அதிகரித்து வருவது பெரியாரின் தேவையை உணர்த்துவதாக உள்ளது.

தமிழகத்தில் உள்ள உள்ள அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பங்கேற்று பயன் பெற்று வருகிறார்கள். இந்த ஆண்டு (2019) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனைத்து வருவாய் மாவட்டங்களில் 'பெரியார் 1000' வினா விடைப் போட்டி 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை ஒரே பிரிவாக நடைபெறுகிறது. 45 நிமிடங்களில் 50 வினாக்களுக்குப் பதில் அளிக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழிகளில் தேர்வு நடைபெறுகிறது.

6.11.2019 தொடங்கிய 'பெரியார் 1000' வினா விடைப் போட்டி நவம்பர் 22 வரை அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறுகிறது. தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதத்தில் www.periyarquiz.com என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என பெரியார் சிந்தனை உயராய்வு மய்யத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு சிறப்பம்சங்கள்


பங்கேற்க தகுதி : 6ஆம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரை பயிலும் மாணவர்கள்.

பதிவுக் கட்டணம் : பதிவுக் கட்டணம் (ரூ.50/)-அய் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்..

தேர்வுக்குரிய பாடம் : முன்பதிவு செய்துள்ள மாணவர்களுக்கு தந்தை பெரியார் பற்றிய ஆயிரம் செய்திகள் வினா-விடை வடிவில் கொடுக்கப்பட்டிருக்கும் ஒரு கையேடு வழங்கப்படும். அதிலிருந்து 45 வினாக்களைக் கொண்ட தேர்வு நடைபெறும்.

விடைத்தாள்: விடைத்தாள் 'Coding Sheet' வடிவமைப்பில் கொடுக்கப்பட்டிருக்கும். 45 வினாக்களைக் கொண்ட வினாத் தாளில், ஒவ்வொறு வினாவுக்கும் 4 விடைகள் (A, B, C, D)என கொடுக்கப்பட்டிருக்கும்.சரியான விடையைத் தெரிவு செய்து ,விடைத்தாளில் அதற்குரிய எழுத்தை முழுமையாக நிழலிட்டு நிரப்ப வேண்டும்.இறுதியாகக் கேட்கப்படும் வினாவிற்கு விளக்கமான விடை (எழுத்தில்) அளிக்க வேண்டும்.தவறான விடைக்கு மதிப்பெண் குறைப்பு இல்லை.கொள்குறி வினாவிற்கு தலா ஒரு மதிப்பெண் வீதம் 45 மதிப்பெண்களும், எழுத்து வினாவிற்கு 5 மதிப்பெண்களும் மொத்தம் 50 மதிப்பெண்களும் தேர்வு நடைப்பெறும்.

தேர்வு மொழி : தமிழ் / ஆங்கிலம்.